October 2023 Calendar With Festivals: சரஸ்வதி பூஜை, விஜயதசமி என முக்கிய பண்டிகைகளை கொண்ட அக்டோபர் மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிறக்க உள்ளது. இந்த அக்டோபர் மாதம் 31 நாட்களை கொண்டது.
இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
அக். 1. முதியோர் தினம் (ஞாயிறு)
அக். 2. சங்கடஹர சதுர்த்தி, காந்தி ஜெயந்தி ( திங்கள்)
அக். 3. கார்த்திகை விரதம் ( செவ்வாய்)
அக். 6. மகாலட்சுமி விரதம் முடிவு (வெள்ளி)
அக். 10 ஏகாதசி விரதம் ( செவ்வாய்)
அக்.11 பிரதோஷம் ( புதன்)
அக். 12 மாத சிவராத்திரி ( வியாழன்)
அக். 14 அமாவாசை ( சனி)
அக். 16 சந்திர தரிசனம், சோமவார விரதம் (திங்கள்)
அக். 18 சதுர்த்தி விரதம், துலா சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு (புதன்)
அக். 19 லலிதா பஞ்சமி ( வியாழன்)
அக். 20 சஷ்டி விரதம் ( வெள்ளி)
அக். 21 துர்கா பூஜை ( சனி)
அக். 22 துர்காஷ்டமி ( ஞாயிறு)
அக். 23 ஆயுதபூஜை, மகாநவமி, சரஸ்வதி பூஜை, ( திங்கள்)
அக். 24 விஜயதசமி (செவ்வாய்)
அக். 25 ஏகாதசி விரதம் (புதன்)
அக். 26 பிரதோஷம் ( வியாழன்)
அக். 28 பௌர்ணமி விரதம், பெளர்ணமி, ஐப்பசி பௌர்ணமி
அக்.30 கார்த்திகை விரதம் ( திங்கள்)
அக்டோபர் மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகை வட இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, தொழிலுக்காக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதும் தமிழ்நாட்டில் வழக்கம் ஆகும். அன்றைய தினம் மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் காணப்படும்.
மேலும் படிக்க: Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? அறிவிப்பை வெளியிட்ட கோயில் நிர்வாகம்..
மேலும் படிக்க: Mayiladuthurai: வெகுவிமரிசையாக நடைபெற்ற பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் விழா!