நடிகர் ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘இறைவன்’ (Iraivan). விஸ்வரூபம் பட வில்லன் ராகுல் போஸ் சீரியல் கில்லராக அச்சுறுத்தும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லரே பார்ப்பவர்களை திகிலில் உறையவைத்து, போலீஸ் - சைக்கோ கொலைகாரன் இடையேயான திக் திக் காட்சிகளைக் கொண்டிருந்தது.


இந்நிலையில், அதீத வன்முறைக் காட்சிகள் காரணமாக இப்படத்துக்கு ஏ. சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இறைவன் படத்துக்கு  ட்விட்டரில் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. நெட்டிசன்கள் படம் குறித்து என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.


 






 


முதல் பாதி முடிந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இடைவேளை ப்ளாக் சிறப்பாக வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






“அதிக இடையூறுகள் இல்லாமல், ஒரு டார்க் சினிமா. இண்டர்வெல் நெருங்கும் வேளையில் சூடுபிடிக்கிறது, சில ஆச்சர்யங்களும் உள்ளன. சமீபத்தில் ஜெயம் ரவியின் சிறந்த பர்ஃபாமன்ஸ் இதுதான்” எனத் தெரிவித்துள்ளார். 






"கோரமான கொலைகள் இடம்பெற்றுள்ளன. காதல் பகுதி சொல்லிக் கொள்ளும்படி இல்லை.. கில்லராக நடித்துள்ள ராகுல் போஸின் பிஜிஎம் பொருத்தம். திரைக்கதை அருமை..." எனத் தெரிவித்துள்ளார்.


 






“ "லாஜிக்கே இல்லாத க்ரைம் த்ரில்லர். படம் மிகவும் மெதுவாக செல்கிறது. திரைக்கதை ஒன்றவைக்கவில்லை. எமோஷனல் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.






"முதல் பாதி நன்றாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் லாஜிக்கே இல்லை, ஒன்ற வைக்கவில்லை. கொடூர கொலைகள், சைக்கோ நடிப்பு இவற்றை நீங்களே ரிஸ்க் எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.