15 ஆண்டுகளுக்கு பிறகு மானாமதுரை அருகே மழை பொழிவு ஏற்பட ,விவசாயம் செழிக்க அம்மனுக்கு மண் சட்டிகளில் கறிசோறு ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.


 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்துவருகிறது. இளையான்குடி, மானாமதுரை பகுதியில் மிகுந்த சவாலுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் மணல் கொள்ளை அதிகளவு நடைபெறுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது.






ஆனாலும் விவசாயத்தை இப்பகுதி விவசாயிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் 15- ஆண்டுகளுக்கு பிறகு மானாமதுரை அருகே மழை பொழிவு ஏற்பட்டு ,விவசாயம் செழிக்க அம்மனுக்கு மண் சட்டிகளில் கறிசோறு ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.




மானாமதுரை அருகே  கிளாங்காட்டூர் & ஏ.நெடுங்களும் கிராமத்தின் அழகி மீனாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15- ஆண்டுகளுக்கு பிறகு மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும்  கிராமத்தார்கள்  காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர். புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிசோறு, நாட்டுக் கோழி, கருவாடு, ஆட்டுக் கறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி விளக்கு அணையமால், கிராம மக்கள் ஊர்வலமாக   வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.  அழகி மீனாள் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடத்தினார். இதில் கிளாங்காட்டூர் & ஏ.நெடுங்குளம் கிராம மக்கள் பங்கேற்றனர். 


 




 



Calculate Your Body Mass Index ( BMI )


Calculate The Age Through Age Calculator