![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் - திரளான பக்தர்கள் வழிபாடு
உலக நன்மை வேண்டி ஸ்ரீ நல்லநாயகி அம்மன் திருக்கோயிலில் நடந்த சிறப்பு யாகம்.
![மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் - திரளான பக்தர்கள் வழிபாடு Mayiladuthurai manakkudi nallanayagi Amman temple special prayer - TNN மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் - திரளான பக்தர்கள் வழிபாடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/b3bb5df9cb1a67e0d0e375ef2d015bab1710758025943733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ நல்லநாயகி அம்மன் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ நல்லநாயகி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் பங்குனி மாத உற்சவம் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோயிலில் பங்குனி உற்சவம் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
Durai Vaiko: திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி - வைகோ அறிவிப்பு
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆண்டு மகா சண்டி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு ஹோமத்தில் தருமபுரம் ஆதீனத்தின் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது.
Election Commission: 6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!
மேலும், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நல்ல நாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
NEET UG 2024: நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்- எப்படி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)