குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆண்டு தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 


ஆடி மாத திருவிழாக்கள் 


கடந்த ஜுலை மாதம் 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.


மயிலாடுதுறையில் 3,5, 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வு: ஆட்சியர் அதிரடி- ஆசிரியர்கள் சொல்வது இதுதான்!




ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் பக்தர்கள் வேண்டும் அனைத்து நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 


Devanathan: ரூ. 525 கோடி நிதி மோசடி புகார் : பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது




காப்பு கட்டுடன் தொடங்கிய திருவிழா 


அதனை வகையில் இந்தாண்டு ஆண்டு தீமிதி திருவிழாவானது கடந்த ஏழாம் தேதி கோயில் காப்பு கட்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள், அம்மன் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. தீமிதியை முன்னிட்டு முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி கரகம் தலையில் சுமந்து அலங்கார காவடி, கூண்டு காவடி மற்றும் ஏராளமான பக்தர்கள் மேல தாள மங்கள வாத்தியங்கள், கேரள செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். 


Trump Interview: ”கமலா ஹாரீஸை பார்க்க என் மனைவி போல் இருந்தார்” சட்டென வாய்விட்ட டிரம்ப்..!




நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 


தொடர்ந்து அங்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பக்தியுடன் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீமிதி விழாவில் குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.


“பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா” - முருகனுக்கு பால் குடம் எடுத்து வேண்டிய அடிவார மக்கள்