✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Devanathan: ரூ. 525 கோடி நிதி மோசடி புகார் : பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது

செல்வகுமார்   |  13 Aug 2024 04:03 PM (IST)

Devanathan: ரூ. 525 கோடி நிதி மோசடி செய்யப்பட்ட புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்

ரூ. 525 கோடி நிதி மோசடி வழக்கில், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

நிதி மோசடி புகார்:

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன், இந்து சரசுவதி நிதி லிமிடெட்  நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.  இவர் , பாஜக கூட்டணியில் இருக்கிறார். அதிக வட்டி தருவதாக கூறி பல நபர்களை ஏமாற்றியதாக கூறி , பலர் அவர் நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று, நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி, அவருடைய நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து, 140 க்கும் மேற்பட்ட புகார்களும் தேவநாதனுக்கு எதிராக , கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில, பாஜக கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் இன்று கைது செய்யப்பட்டார். தேவநாதனை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்,  திருச்சியில் வைத்து கைது செய்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் தேவநாதன் யாதவ்வை கைது செய்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைது:

இந்நிலையில் நிதி மோசடி தொடர்பாக  140க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரில் தேவநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் , பாஜக கட்சி சார்பில் தேவநாதன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆருத்ரா நிதி மோசடியில், பாஜக கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது, கூட்டணி கட்சியை சேர்ந்த தேவநாதன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது. 

Also Read: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?

Published at: 13 Aug 2024 02:19 PM (IST)
Tags: BJP breaking news Abp nadu Devanathan
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Devanathan: ரூ. 525 கோடி நிதி மோசடி புகார் : பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.