Trump interview with Elon Musk In Tamil :அமெரிக்க நாட்டில் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். 


 


டிரம்ப் - எலான் மஸ்க் நேர்காணல்:


 


தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், டிரம்ப்பிடம் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X தளத்தின் தலைவருமான எலான் மஸ்க் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணலானது X தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. முன்பிருந்தே, டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த வருகிறார் எலன் மஸ்க்.


இந்த நேர்காணலில், எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, உடல்நலன் உள்ளிட்ட காரணங்களால் விலகிய பைடன் குறித்து டிரம்ப் கடுமையாக சாடினார். நேர்காணலுக்கு பயப்படக்கூடியவர் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், கமலா ஹாரீஸ் குறித்தும் விமர்சனங்களை அடுக்கினார்.


 


இதழ் அட்டைப்படம்:


 


சமீபத்தில் கமலா ஹாரிஸ் புகைப்படமானது, சமீபத்தில் டைம் இதழின் அட்டைப்படத்தில் வெளியானது. அந்த அட்டைப்படம் குறித்து, பேசிய டொனால்ட் டிரம்ப், அவரது சொந்த மனைவியுடன் ஒப்பிட்டார்.


அட்டைப்படத்தில் ​​" கமலா ஹாரீஸ், எங்கள் சிறந்த முதல் பெண்மணி மெலனியாவைப் போலவே தோற்றமளித்தார்," என்று டிரம்ப் மஸ்க்கிடம் கூறியது பேசு பொருளாகியுள்ளது. 






 


புதினிடம் போரை நிறுத்த சொன்னேன்:


 


ரஷ்ய அதிபர் புதினிடம் , யுக்ரேன் மீது போர் தொடுக்க வேண்டாம் என சொன்னேன், ஆனால் அவர் கேட்கவில்லை. வேறு வழி இல்லை என புதின் தெரிவித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். புதினுடன், அடிக்கடி பேசுவேன், அவரும் என்மீது மதிப்பு கொண்டுள்ளார்; மேலும், அதிபரானால் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவேன் என்றும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். 


இதுவரையிலான அமெரிக்க அதிபர் கருத்து கணிப்பகள் முடிவுக,  குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்புக்கெ வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. அதற்கு, ஜனநாயக கட்சியின் நிச்சயம்ற்றத் தன்மை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் பைடன் வேட்பாளர் என முன்மொழியப்பட்ட நிலையில், வயதுமூப்பு காரணமாக விலகியது,  கமலா ஹாரீஸ் மாற்றப்பட்டார் உள்ளிட்ட நிச்சயமற்ற காரணங்கள் முக்கியமாக அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பது தேர்தல் முடிவுகளே பதில் என்பதால், பொறுத்திருந்து பார்ப்போம்.