பழனிவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தரக்கோரி வியாபாரிகள் சார்பில் பழனி முருகனை வேண்டி பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது . இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நியமிக்கப்பட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டு கிரிவலப் பாதையில்  கார், வேன், பேருந்தில் இருந்து இருச்க்கர வாகனங்கள் வரை எந்த விதமான வாகனங்கள் செல்லாத வாரும் , கிரிவல பாதை அடைக்கப்பட்டது.  


2000 மதுபாட்டில்கள், 27 சேவல், 47ஆடுகள்... கருப்பண்ண சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு




மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலையோர கடைகளும் அகற்றப்பட்டது. கிரிவலப் பாதையில் பேட்டரி கார், இலவச பேருந்து சேவைகளை கோவில் நிர்வாகம் இயக்கி வைக்கிறது.  இந்நிலையில் சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் இழந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவிக்கின்றனர்.  




எங்கே செல்வது எவ்வாறு தங்களது குழந்தைளை வளர்ப்பது என்று இருக்கக்கூடிய சூழலில் பழனியாண்டவனே எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தா என்ற கோரிக்கையை பழனி ஆண்டவருக்கு வைத்து ஏராளமான வியாபாரிகளும் சிறு வணிகர்களும் ஒன்று இணைந்து திருஆவினன்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான பால்குடங்களை எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகத்திற்கு செய்து தங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரி பழனியாண்டவனிடம்  கோரிக்கை வைப்பதற்காக சென்று வருகின்றனர்.


Kerala Lottery Result Today (13.08.2024): ஸ்ரீ சக்தி SS-428 3 மணிக்கு முடிவுகள்! முதல் பரிசு - ரூ.75 லட்சம்


 




சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?


பழனி என்பது கோவில் நகரம் என்பதால் தங்களுக்கு மாற்று தொழில் தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்போது திருஆவினன்குடியில் இருந்து பால்குட ஊர்வலமானது புறப்பட்டு சன்னதி வீதி வழியாக வியாபாரிகள், பொதுமக்கள், இந்து அமைப்புகள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் முருகன் மாநாடு வருகின்ற 24,25 ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் 20ம் தேதி 10 ஆயிரம் வியாபாரிகள், பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.