மேலும் அறிய

மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி 30-ம் நாள் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உற்சவ கடை முக தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை அடுத்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில்  மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான்  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுவதாக புராணம் தெரிவிக்கின்றது. 

மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். 

மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். 

மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

இத்தகைய சிறப்பு மிக்க மயிலாடுதுறை காவிரியில் ஆண்டுதோறும்  ஐப்பசி மாதம் 30 -ஆம் நாள் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற துலா உற்சவ, கடை முக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களான மயூரநாதர், ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் ஆலயங்களிலிருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு கரைகளிலும் கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற்றது. 

மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

கடைமுகத் தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். காவிரி ஆற்றின் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு கரைகளிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடை முக தீர்த்தவாரி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தொடர்ந்து புனித நீராடி வருகின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget