மேலும் அறிய

சீர்காழி சட்டைநாதர் கோயில்: ஆவணி மாத கோ பூஜை! பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபாடு...

பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தமிழ்  மாதமான ஆவணி மாத பிறப்பை அடுத்து சிறப்பு கோ பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.


சீர்காழி சட்டைநாதர் கோயில்: ஆவணி மாத கோ பூஜை! பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபாடு...

மூன்று நிலைகளில் சிவபெருமான் 

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். 


சீர்காழி சட்டைநாதர் கோயில்: ஆவணி மாத கோ பூஜை! பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபாடு...

தமிழ் மாதம் ஆவணி பிறப்பை அடுத்து நடைபெற்ற கோ பூஜை 

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பன்று சிறப்பு கோ பூஜை நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ் வருட முதல் மாதமான சித்திரை மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோ சாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மற்றும் கன்றுக்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர். 


சீர்காழி சட்டைநாதர் கோயில்: ஆவணி மாத கோ பூஜை! பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபாடு...

63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு

தொடர்ந்து கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. முன்னதாக காஷி கொடுத்த நாயகருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது .தொடர்ந்து திரளான பக்தர்கள் தேவார பதிகங்கள் பாடி 63 நாயன்மார்களை வழிபாடு செய்தனர். இதேபோன்று ஆவணி மாத பிறப்பை அடுத்து மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget