மேலும் அறிய

ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், பரிமளரெங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு, இறைவன் விஸ்வரூப தரிசனத்தில்  காட்சி கொடுத்த இடமாகும். 


ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், பரிமளரெங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. 


ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், பரிமளரெங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், பரிமளரெங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு  ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு,  பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பெருமாளை வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28 -வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருடன் ரத்திண அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 


ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், பரிமளரெங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

அதனையடுத்து  சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீ தேவி, பூ தேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில், இன்று அதிக அளவு பக்தர்களுடன் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து பெருமாளை சேவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!
வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: மூலஸ்தான தரிசனத்தில் புதிய மாற்றங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: மூலஸ்தான தரிசனத்தில் புதிய மாற்றங்கள்!
பொங்கு சனிபகவான் அருளும் அற்புதத் திருத்தலம்... கல்வி, செல்வம், திருமண யோகம் தரும்  ஸ்தலம்
பொங்கு சனிபகவான் அருளும் அற்புதத் திருத்தலம்... கல்வி, செல்வம், திருமண யோகம் தரும்  ஸ்தலம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget