தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆடி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


PM Modi Speech: சுதந்திர தின உரையில் மணிப்பூர் விவகாரம் - பிரதமர் மோடி என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!



மேலும், முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த வாரம்  நடைபெற்றது. இந்த பூஜையில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் கோயில் முன்பு ஓடும் சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, உப்பு, பொரியுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து வழிபட்டனர். விழாவின் நிறைவு நாளான நேற்று கோயில் வளாகத்தில் உள்ள கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


CM Stalin on NEET: இதைச் செய்தால் நீட்டை ஒழித்துவிட முடியும்- சுதந்திர தின உரையில் முதலமைச்சர்



இதையொட்டி, பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி 1,000-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்த மது பாட்டில்களை இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தங்களது பெயருடன் பதிவு செய்தனர்.


77th Independence Day: செங்கோட்டையில் பிரதமர்.. கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்; தேசியக் கொடியேற்றும் தலைவர்கள்..!




பின்னர் அவர்கள் மதுபாட்டில்களை உச்சிக்கால பூஜைக்கு வழங்கினர். இதையடுத்து சாமிக்கு மதுபாட்டில்கள் படையலிடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்திய 26 சேவல், 43 ஆடுகள் சாமிக்கு பலியிடப்பட்டது. இதையடுத்து சேவல், ஆட்டு இறைச்சியை சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.