கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டி.இடையபட்டியில் மதுரை வீரன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற கோலாட்ட நடன நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.


 




 


கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அருகே டி இ இடையபட்டியில் ஸ்ரீ மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்றது. அந்த ஊரைச் சேர்ந்தால் சிறுவர்கள் சிறுமியர்கள் பெண்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் கும்மி பாட்டு பாடி அதற்கேற்ப கோலாட்ட நடனம் ஆடினார். பல்வேறு கும்மி பாட்டு பாடகர்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடிய கோலாட்ட நடனம் பொது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. தற்போது அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்ட நடனத்தை பொதுமக்களிடையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஊக்குவிக்கும் பொருட்டும்.


 




 


நடன நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் இந்த கோலாட்ட நடன நிகழ்ச்சிகளை பயிற்சி அளித்து வருவதாகவும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழாவில் கோலாட்ட நடன நிகழ்ச்சிக்கு தங்கள் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சென்று நடனமாடியதாகவும் விழா கமிட்டியினர் தெரிவித்தனர். முன்பு கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய கலை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில்  வெகுவாக குறைந்து வருவதாகவும் எனவே அதனை மீண்டும் மக்களிடையே கொண்டு கோவில் திருவிழாக்களில் தாங்கள் கோலாட்ட நடனமாடி வருவதாகவும் தெரிவித்தனர்.


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா.


 




 


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாரதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.