தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோகுலகிருஷ்ணருக்கு 1008 லிட்டர் பால் உட்பட பல வகை அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோகுல கிருஷ்ணனை வழிபட்டு சென்றனர்.
அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி! சாமியாரா..? கிரிமினலா..? யார் இந்த ’மிரட்டல்’ பரமஹம்ஸா?
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ண திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் அமர்ந்திருக்கும் ஶ்ரீ கோகுல கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோகுல கிருஷ்ணனுக்கு வாழைப்பழம், மாதுளை பழம், பேரிச்சை பழம் உள்ளிட்ட பழ வகைகள் கொண்டு பழங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோகுல கிருஷ்ணனுக்கு 1008 லிட்டர் பால்களாலும் தயிர் சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு சந்தன காப்பு சாற்றி அபிஷேகங்களும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சந்தன காப்புடன் வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து மயில் தோகையுடன் அலங்கரிக்கப்பட்ட கோகுல கிருஷ்ணருக்கு நட்சத்திர தீபாராதனை பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெரியகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டு சென்றனர்.