சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரியமான உடையான வேட்டி சட்டையை அணிந்து, பொங்கலோ பொங்கல் எற முழக்கமிட்டு உற்சாகமாக காவல்துறையினர் பொங்கல் கொண்டாடினர். நாடு முழுவதும் தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விவசாயம் செழிப்பதற்கும் தமிழர்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


Shaun Marsh Retirement: ஐபிஎல் அறிமுக சீசனிலேயே அதிரடி.. முதல் ஆரஞ்சு தொப்பியை வென்ற ஷான் மார்ஷ் ஓய்வு அறிவிப்பு!




பழையன கழிதலும் புதியன புகுதல் என பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக  போகி பண்டிகையும் மறுநாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையும், அதனைத் தொடர்ந்து உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கலும் அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்கு இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


Income Tax Recruitment: அரசு வேலை! 291 காலி பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள காவல் முனீஸ்வரன் கோயில் வளாகத்தில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சாதி, மத வேறுபாடு இன்றி இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் முறைப்படி பிராத்தனை செய்து, சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். 


Maldives : இந்தியாவுக்கு தேதி குறித்த மாலத்தீவு.. சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் புதிய அதிபர்..




இதனை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு சிறப்பு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரியமான உடையான வேட்டி சட்டையை ஒரேவிதமாக அணிந்து, பொங்களோ பொங்கள் முழக்கமிட்டு உற்சாகமாக கொண்டாடினர். இதில்  சீர்காழி காவல் துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.


Vettaiyan Update : பொங்கல் சிறப்பு வெளியீடாக வெளியாகும் வேட்டையன் போஸ்டர்.. படக்குழு கொடுத்த அப்டேட்