பொங்கல் சிறப்பு வெளியீடாக ரஜினிகாந்த் நடித்து வரும்  வேட்டையன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட இருக்கிறது


வேட்டையன்


.த.செ . ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினியின் 170-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், டானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள்  நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


படப்பிடிப்பு


ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ரஜினி ரசிகர்கள் கோயிலைச் சுற்றி கூடி நின்று அவரை வரவேற்ற வீடியோ இணையதளத்தில் வரைலாகி வருகிறது.






கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் சிறிய வீடியோ ஒன்றும் வெளியானது, வேட்டையன் படத்தின் சிறப்பு போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.






தலைவர் 171


வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. தற்போது இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


தலைவர் 172 , 173


அடுத்ததாக ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைவதை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 


லால் சலாம்


இந்தப் படங்கள் தவிர்த்து ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். விஷ்ணு விஷால் , விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க. ஏ. ஆர் .ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது




மேலும் படிக்க :  Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!


BigBoss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?