அறுபடை வீடுகளில்  மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என  பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு  தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .


இளவரசர் சார்லஸ் டூ அரசர்… சார்லஸின் புதிய அவதாரம்… காத்திருக்கும் பொறுப்புகள் என்னென்ன?


இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர்.


மனவலிமையே மூலதனம்: வைரலான ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்ட் வீடியோ! இணையவாசிகள் நெகிழ்ச்சி!


இந்த நிலையில் கேரளாவில் சிறப்பாக கொண்டாடும் திருவிழாவான ஓணம் பண்டிகை முன்னிட்டு  தொடர் விடுமுறை என்பதால் கேரள பக்தர்கள், சனி ,ஞாயிறு விடுமுறை என்பதாலும் பழனி கோயிலுக்கு நேற்று இன்று அதிகாலை முதலே  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


Twitter New Feature: ட்விட்டரில் விரைவில் வருகிறது வாட்ஸ் அப் ஷேர் ஆப்ஷன்! புதிய அப்டேட் இதுதான்! விவரம்!


அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை  நடைபெற்றது. அதிகாலை முதலே கேரளா பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட  அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ரோப்கார் ,மற்றும் மின் இழுவை ரயிலுக்கு சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் தரிசனத்திற்கு 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கேரள பக்தர்கள் தங்களது முடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அரைமோதியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண