சீர்காழியை அடுத்து வைத்தீஸ்வரன் கோயில் ஏராளமான பக்தர்கள் பாரம்பரிய விழாவான முளைப்பாரி திருவிழாவில் முளைப்பாரி சுமந்து வழிபாடு மேற்கொண்டனர்.


ஆடி திருவிழாக்கள் 


கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோவில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கடந்த இரண்டு நாட்களாக ஆடி திருவிழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


Aadi Month 2024: பஞ்சபூதங்கள் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும் அரியதொரு மாதம் ஆடி - வரலாற்று ஆய்வாளர்கள்




மந்தகருப்பண்ணசுவாமி கோயில் திருவிழா 


அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அடுத்து வைத்தீஸ்வரன் கோயில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தோறும் அடி மாதம் ஆண்டுத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்த கோயிலின் திருவிழா கடந்த ஜுலை 7- ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.


Manjummel Boys Director : மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருக்கு ஜாக்பாட்...பாலிவுட்டில் களமிறங்கும் சிதம்பரம்




நவதானியங்கள் வழங்கல்


அதனை தொடர்ந்து, முளைப்பாரிகளுக்கு தேவையான நவதானியங்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை பக்தியுடன் பெற்று கொண்ட பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று ஒரு வார காலம் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தார். பின்னர் பக்தியுடன் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை அரவெலி அய்யா சன்னதியில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. 


மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி !




வீடுகளில் வளர்க்கப்படும் முளைப்பாரி 


அதனை அடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட  முளைப்பாரிக்கு சிறப்பு படையலிட்டு பக்தர்கள்  மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன், சக்தி முன் செல்ல ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பெண்கள் ஆண் என கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர். 


Bank Of Baroda: வாடிக்கையாளர்களே! புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பாங்க் ஆஃப் பரோடா!




ஆற்றில் கரைந்த முளைப்பாரிகள்


கோயில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து கோயிலில் இருந்து பெரிய சக்தி கரம் முன் செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500 -க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு அரவெலி திருநகரி ஆற்றுக்கு எடுத்து சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர்  பக்தர்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் விட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிகளவில் வழக்கத்தில் உள்ள இந்த முளைப்பாரி விழா தமிழகத்தின் மற்ற மாவட்டகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆதித்யநாத்தின் ஓவர் கான்ஃபிடண்ட்: உ.பி பின்னடைவுக்கு 6 முக்கிய காரணங்களை கண்டறிந்த பாஜக!