மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால் தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாக எந்த அரசும் இதை செய்யவில்லை. 


தமிழகத்தில் தொடர் கொலைச் சம்பவம் நடப்பது வருத்தமளிக்கிறது. திடீரென்று 77 ரவுடிகளை அரெஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக இந்த ரவுடிகள் இருந்தது காவல்துறைக்கு தெரிந்து தானே இருக்கிறது. என்கவுண்டர் செய்வதால் கூலிப்படைக்கும் காவல் துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். காரைக்குடியில் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி


கார்த்தி ப.சிதம்பரம்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி‌யில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி எம்.பி...,”  நீட் இந்தியாவிற்கு தேவையில்லை. நீட்டுக்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை நிறை, குறை குறித்து பேச சபாநயாகரிடம் ராகுல் காந்தி கேட்டார். ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. நீட் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் தேவையில்லை. பி.ஜே.பி., செய்த எந்த தவறுகளையும் ஒப்புக்கொள்வதில்லை. மூன்றாவது முறையாக பிரதமரான மோடி அமைச்சரவையாவது மாற்றுவார் என்று நினைத்தோம். ஆனால் அதைக் கூட அவர் மாற்றி அமைக்கவில்லை. எங்களை ஆலோசனைக்கு கூப்பிடுவதில்லை. மாநில அரசிற்கு போதிய நிதி வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை ஒழுங்குபடத்த வேண்டும். அதனை மாற்றி அமைக்க அவர்களுக்கு மனமும் இல்லை, அறிவும் இல்லை.


மின் கட்டண உயர்வு


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால் தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாக எந்த அரசும் இதை செய்யவில்லை. இந்த அரசால் மட்டும் தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என சொல்ல முடியாது. தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கிறது. அது போன்ற ஆரோக்கியமான அரசியல் குறித்து விவாதம் செய்ய வேண்டும். சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வருகிறார் என்ற கவர்சியான அரசியல் தேவையற்றது. அப்படியான அரசியல் களம் தமிழகத்தில் இல்லை.


- ‘மதுரையில் வாக்கிங் போகாதீங்க ; அப்பறம் இடைத் தேர்தல் வந்துரும்’ - காரணம் சொன்ன செல்லூர் ராஜூ


தீர்வு என்கவுன்டர் கிடையாது


தமிழகத்தில் தொடர் கொலைச் சம்பவம் நடப்பது வருத்தமளிக்கிறது. திடீரென்று 77 ரவுடிகளை அரெஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக இந்த ரவுடிகள் இருந்தது காவல்துறைக்கு தெரிந்து தானே இருக்கிறது. கூலிப்படை மூலம் நடைபெறும் கொலைகளை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் இதற்கு தீர்வு என்கவுன்டர் கிடையாது. என்கவுண்டரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி செய்தால் கூலிப்படைக்கும் காவல் துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். குற்றவாளிகளை உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Railway; முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் !


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai NTK Murder: திருமண உறவால் பிரச்சினை; நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!