இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பயன்களுக்காக பல்வேறு திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதம் இருக்கிறது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாங்க் ஆஃப் பரோடா.
பாப் மான்ஸூன் டமாக்கா டெபாசிட் திட்டம்:
அதிகளவு பயனாளர்களை கொண்டுள்ள இந்த வங்கி நாட்டின் முக்கியமான வங்கிககளில் ஒன்று. அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வகையில் ஒரு சிறப்பு டெர்ம் டெபாசிட் திட்டத்தை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்திற்கு bob மான்ஸூன் டமாக்கா டெபாசிட் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
399 நாட்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் மற்றும் 333 நாட்களுக்கு 7.15 சதவீதம் வட்டி விகிதம் என்ற இரு வேறு கால வரையறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த 15ம் தேதி பரோடா வங்கியால் தொடங்கப்பட்டது.
யாருக்கு பொருந்தும்?
இந்த திட்டமானது ரூ. 3 கோடிக்கும் குறைவான தனிநபர் டெபாசிட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மூத்த குடிமக்கள் தங்கள் டெபாசிட்டின் மீது 399 நாட்களுக்கு 7.75 சதவீதம் வட்டி மற்றும் 333 நாட்களுக்கு 7.65 சதவீத வட்டி என்ற விகிதத்தில் 0.50% கூடுதல் வருமானத்தை பெறுவார்கள். தவிர, முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு மேலும் கூடுதலாக 0.15 சதவீதம் உபரியாக வழங்கப்படுகிறது (குறைந்த பட்சம் 1 கோடியிலிருந்து 3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைக்கு இது பொருந்தும்)
இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன் எனப்படும் மூத்த குடிமக்களுக்கான கூடுதல் 0.50 சதவீதம் வட்டி மற்றும் முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுகளுக்கான உபரி 0.15 சதவீத வட்டி ஆகியவை உள்ளடங்கும்
bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் w.e.f. 15.07.2024 |
||||
|
முன் முடிக்கக் கூடியவை |
முன் முடிப்பு இல்லாதவை (1 கோடிக்கு மேல் 3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகை) |
||
காலவறை |
குடியிருப்போர் /பொது மக்கள் /NRO/NRE* |
குடியிருக்கும் மூத்த குடிமக்கள் |
குடியிருப்போர் /பொது மக்கள் /NRO/NRE* |
குடியிருக்கும் மூத்த குடிமக்கள் |
399 நாட்கள் |
7.25% p.a. |
7.75% p.a.
|
7.40% p.a. (7.25 + 0.15) |
7.90% p.a. (7.25 + 0.50 + 0.15) |
333 நாட்கள் |
7.15% p.a. |
7.65% p.a.
|
- |
- |
என்.ஆர்.இ. வாடிக்கையாளர்கள் 399 நாட்களுக்கான bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தைப் பெறலாம் மற்றும் 2.00 கோடிக்கும் குறைவான முன்முடிப்பு விலக்கப்பட்ட டெப்பாசிட்டுகளை மட்டுமே பெறமுடியும்.பாங
பாங்க் ஆப் பரோடாவின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் சஞ்சய் இந்த திட்டம் தொடர்பாக கூறும்போது, பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது தங்களது டெப்பாசிட்டுகளில் இருந்து அதிக இலாபத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு தருணமாக இது விளங்குகிறது என்றார். இந்த bob மான்ஸூன் டமாக்கா டெபாசிட் திட்டத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது வங்கியின் எந்த ஒரு கிளை மூலமாகவும் தொடங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.