தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் உலக புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலின் கிழக்கே பிரசித்தி பெற்ற பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் அம்பிகையை வழிபட்டால் நோயற்ற நிறைவான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க கோயிலின் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகளை கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து பக்தர்கள் செய்து வந்தனர்.


ABP கோயில் உலா: கரூர் குளித்தலை அருள்மிகு ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா.. குவிந்த பக்தர்கள்




குடமுழுக்கு விழா


தொடர்ந்து கோயில் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதை அடுத்து கும்பாபிஷேகம் விழாவானது வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜுலை 10-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு,  கும்பாபிஷேகம் தினத்தில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.


ABP கோயில் உலா: 33 அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை - மெய்சிலிர்க்க தரிசனம் செய்த பக்தர்கள்




புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு 


அதனைத் தொடர்ந்து யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மேள தாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தனர். பின்னர் சரியாக 12:10 மணிக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓதி, ஸ்ரீமத் காமிக்காதி சிவாகம முறைப்படி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 


NDA Vs INDIA BYpolls: மாஸ் காட்டும் INDIA கூட்டணி - 10 தொகுதிகளில் முன்னிலை - பாஜக கடும் பின்னடைவு - 7 மாநில நிலவரம்




தருமபுரம் ஆதீனம் 


இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்‌. கும்பாபிஷேகத்தை பால சர்வேஸ்வர குருக்கள் தமையிலானோர் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி டிரஸ்ட் திருப்பணி குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.


திண்டுக்கல்: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜம்புத்துரை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா