NDA Vs INDIA BYpolls: நாட்டின் 7 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்:


 தமிழ்நாடு உட்பட நாட்டின் 7 மாநிலங்களைச் சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அந்த வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் 7 மாநிலங்களில் நான்கில், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை, எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இதனால், இந்த இடைத்தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சாதிக்குமா அல்லது பாஜகவிடம் சறுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெரும்பான்மையான இடங்களில் எதிர்க்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.


10 இடங்களில் I.N.D.I.A. கூட்டணி முன்னிலை:



  • மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய சட்டமன்றத் தொகுதிகள்ல் தேர்தல் நடைபெறுகிறது. அந்த நான்கு தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு நடபெற்ற பொதுத்தேர்தலில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா ஆகிய தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது

  • இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதில், டேஹ்ரா மற்றும் நலகர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னிலை வகிக்கின்றனர்.

  • உத்தராகண்ட் தொகுதியில் தேர்தல் நடைபெற்ற பத்ரிநாத் மற்றும் மங்களூர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக மற்றும் பிஎஸ்பி கட்சியி வேட்பாளர்கள் இரண்டாவது இடத்திற்கு மாறி மாறி முன்னேறி வருகின்றனர்

  • பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொஹிந்தர் பகத் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

  • பிகாரின் ரூபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர் ஒருவரிடம் பின் தங்கியுள்ளார்.

  • தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 33 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

  • மத்திய பிரதேசத்தில் அமர்வாரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.