திருப்பத்தூர்: ஸ்ரீ சக்தி தண்டு மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ சக்தி தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஜீரனோத்தாரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
 
திருப்பத்தூரில் ஸ்ரீ சக்தி தண்டு மாரியம்மன் ஆலயத்தில் ஜீரனோத்தாரன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி தண்டுமாரியம்மன் ஆலய ஜீரனோத்தாரம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா காலை வெகு விமர்சையாக  நடைபெற்றது.
 
இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு தலைவரும் முன்னாள் அரசு வழக்கறிஞர் SRK குரூப் ஆப் ஹோட்டல் 100- ன் உரிமையாளருமான ரவிக்குமார் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 
 
மேலும் மங்கல இசை, விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், மகாலட்சுமிஹாமம் நவகிரகஹோமம், காலயாகபூஜைகள், தம்பதிகள்சங்கல்பம மகாபூரனஹுதி, தாய்வீட்டுசீர் கொண்டு வருதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
இதனை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோபுரத்தின் மீது உள்ள கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. 
 
இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு நிர்வாகிகள், விழா கமிட்டினர், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
 
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Continues below advertisement
Sponsored Links by Taboola