திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜம்புதுரை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றுது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் காசி, இராமேஸ்வரம், அயோத்தி, பத்ரிநாத் கேதார்நாத் மற்றும்  காவிரி, கங்கை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிநீர், முளைப்பாரி, பால்குடம் ஆகியவை தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது,


Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு




அதனைத் தொடர்ந்து நரசிம்ம சீனிவாச சர்மா ஸ்வாமிகள், சிவாச்சாரியர்கள் சுரேஷ் தலைமையிலான வாஸ்து பூஜை, கோபூஜை, சிலை பிரதிஷ்டை, கலச பிரதிஷ்டை பூர்ணாகுதி, யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதணைகள் செய்து வழிபட்டனர். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து இக்கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்வாக கடாம் புறப்பாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.


Watch Video: குஜராத் காவல் வாகனத்தில் மது அருந்தும் கைதி - கொந்தளித்த மக்கள்..!




"அவமானப்படுத்துவது பலம் அல்ல.. பலவீனத்தின் அறிகுறி" ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி!


அதனைத் தொடர்ந்து ஜம்புத்துரை அம்மனுக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜம்புதுரை அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், விழா குழுவினர் கிராம கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.