கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் வான்பொய்யினும் தான் பொய்யா வற்றாத காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.


கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். காசி திருத்தலப் பெருமையை காட்டினும் விஞ்சிய அருள் வழங்கும் சிறப்பினை  பெற்றதுமாகவும், காவிரிக்கு தென்கரையில் இரண்டாவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், அப்பர், அருணகிரியார்,  ஐய்யடிகளால் பாடப்பட்டது.




 


இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது எடுத்து இன்று குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூலை 10 ஆம் தேதி காலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.




புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா ஸ்ரீ கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை லட்ச்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.


இன்று நான்காம் கால யாக கேள்வி பூஜை நிறைவடைந்ததும் மேல காலங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.




வேத மந்திரங்கள் முழங்க விமான ராஜகோபுரம், ஸ்ரீ கடம்பவனேஸ்வரர், ஸ்ரீ முற்றில்லா முலையம்மை அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்,ஸ்ரீ கால பைரவர் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். கலசத்தில் உள்ள புனித தீர்த்தத்தால் மூலவர் ஸ்ரீ கடம்பவனேஸ்வரர், ஸ்ரீ முற்றில்லா முலையம்மை அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காலபைரவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும்  சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.


 



கரூர் மாவட்டம், குளித்தலை அருள்மிகு ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் ஆலய 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் சுமார் 50,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


காசிக்கு அடுத்தபடியாக பெயர் பெற்ற விளங்கும் இந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஏற்பாட்டை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசாரும், ஆங்காங்கே மருத்துவ உதவிகளும் ஆலயத்தின் சார்பாக செய்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் மகா கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.