மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழாவில் புதிதாக அமைக்கப்பட்ட 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கும் புனிதநீர் ஊற்றி நடைபெற்ற அபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்க்க தரிசனம் செய்தனர்.
தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பக்தர்கள் பங்களிப்புடன் குடமுழுக்கு விழா செய்து, கோயிலில் முருகனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து அதற்கான திருப்பணிகளை தொடங்கி செய்து வந்ததனர்.
33 அடி உயரத்தில் அமையப்பட்ட முருகன் சிலை
அதன் தொடர்ந்து இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, 33 அடி உயரத்தில் புதிதாக சிமெண்ட் கொண்டு முருகன் சிற்பம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக மற்றும் முருகன் சிலை பிரதிஷ்டையை அடுத்து இக்கோயிலில் கடந்த பத்தாம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. பின்னர் பூர்ணகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கபட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்க பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.
HBD Vairamuthu: கவிப்பேரரசு பிறந்தநாள்! வைரமுத்து முதன்முறை வாய்ப்பு கேட்டது எப்படி தெரியுமா?
புனிதநீர் ஊற்றி அபிஷேகம்
புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசங்கள் மற்றும் 33 அடி உயரத்தில் அமையப்பெற்ற முருகப்பெருமான் சிலையின் உச்சியை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர முருகன் சிலை மற்றும் மூலவருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Safest Cars: இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் என்ன? - டாப் 5 லிஸ்ட் இதோ..!