மயிலாடுதுறை அடுத்த கழுக்கானிமுட்டம் ஸ்ரீ மஹா பஞ்சமி வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு வழிபாடாக நடைபெற்ற ஏராளமான பெண்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
ஆடி மாத திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
வாராஹி அம்மன் வழிபாடு
நீங்காத துன்பத்தில் வரும் பக்தர்களின் தடையை நீக்கி, பகையை முறித்து, எதிர்ப்பை விலக்கும் ஆற்றல் வாராஹி அம்மனுக்கு உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுவும் குறிப்பாக, தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹி அம்மனை வழிபாட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். ஆன்மீகத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அதில் கடந்த மாதம் ஆனி மாதத்தில் வந்த நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
நான் தமாசாக சொன்னதெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது - கலெக்டர் கலகல பேச்சு
கருட பஞ்சமி திதி
அதேபோன்று அடி மாதத்திலும் வாராஹி அம்மனுக்கு விஷேச தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கழுக்கானிமுட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமி வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கருட பஞ்சமி திதியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் வாராஹி அம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று குழந்தை வரம் வேண்டியும், தாலி பாக்கியத்திற்காகவும், உலக நன்மை வேண்டியும், விவசாய செழிக்கவும் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து 108 திரு நாமங்களை கூறி குங்கும அர்ச்சனை செய்து, தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
Arshad Nadeem: அடடே! பண மழையிலும், பரிசு மழையிலும் நனையும் தங்கமகன் அர்ஷத் - இவ்வளவா?
508 விளக்குகளுடன் பூஜையில் கலந்துகொண்ட பெண் பக்தர்கள்
இதில் 508 பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கிற்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் வாராஹி அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வாராஹி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட விஷேச மங்கள பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Aavani 2024: பக்தர்களே! அபூர்வ பிரதோஷத்தில் பிறக்கும் ஆவணி - எப்போது? இத்தனை சிறப்புகளா?