பிரசித்தி பெற்ற புராதன சிறப்பு வாய்ந்த பழமையான சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.


ஆடி மாத திருவிழாக்கள் 


கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.


Burj al Arab: 17 வகையான தலையணை, தங்க முலாம், ஒரு டீ ரூ.13,5000, உலகின் தலைசிறந்த ஹோட்டல் புர்ஜ் அல் அரப் பற்றி தெரியுமா?




சீர்காழி சட்டைநாதர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.


Gaming Addiction: மனநலனை பாதிக்கும் வீடியோ கேம்..! அடிமையாகி மூழ்கிப்போகும் குழந்தைகள், பெற்றோர் செய்யவேண்டியது இதுதான்..!




பல்வேறு சிறப்புகள்


இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


Travel With ABP: ஊர் சுற்ற பிடிக்குமா? காஃபி போடும் கேப்பில் 3 நாடுகளுக்கு பயணிக்கலாம்..! எப்படி தெரியுமா?




ஆடி பிரம்மோற்சவம் விழா


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் ஆடி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் சன்னதியின் அருகில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், குடும்பம் செழிக்கவும், சிறப்பு பிரார்த்தனைக் கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். மலர்கள் மற்றும் குங்குமம் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியாக மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கம் பூஜை செய்து அம்பாளை வழிப்பட்டனர்.


Lamborghini Urus SE: தலை சுற்றவைக்கும் விலை..! லம்போர்கினி உருஸ் SE இந்தியாவில் அறிமுகம், அப்படி என்ன தான் இருக்கு?