Ayodhya Ram Mandir LIVE: சந்தோஷத்தை விவரிக்க முடியவில்லை - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
Ayodhya Ram Mandir LIVE: நாட்டைக் கட்டமைக்க ராமாயணம் உதவும் - பிரதமர்
Ayodhya Ram Mandir LIVE: ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
ராமர் சிலை பிரதிஷ்டையை வீட்டில் இருந்து தரிசித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்
Ram Temple : ராமர் சிலைக்கு முதல் முறையாக தீபாராதனை செய்தார் பிரதமர் மோடி
Ayodhya Ram Mandir LIVE: பால ராமருக்கு முதல் பூஜையை செய்தார் பிரதமர் மோடி..!
புராணங்கள், வரலாறு மற்றும் ஆன்மீகத்தின் ஆழத்தை இறுகப்பற்றி இருக்கும் கோயில் நகரமான அயோத்தி, ராமர் கோயில் திறப்பு விழாவுடன் ஒரு முக்கியமான நிகழ்வைக் கொண்டாடுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் புனிதமான சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த பழமையான நகரம், இந்து இதிகாசமான ராமாயணத்தின் நாயகனான ராமர் பிறந்த இடமாகப் போற்றப்படுகிறது. பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு வம்சங்கள், காலனித்துவ ஆட்சி மற்றும் சுதந்திர இந்தியாவின் நவீன சகாப்தம் வரை, அயோத்தி பல நூற்றாண்டுகளாக இந்திய வரலாற்றின் பல்வேறு சகாப்தங்களை பிரதிபலிக்கிறது. ராமர் கோயில் என்பது பல நூற்றாண்டுகள் பழமையான ஆசைகளின் உச்சமாகும். கோயில் திறப்பு விழா அயோத்தியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது"
1528: இந்துக்களால் கடவுள் ராமரின் பிறந்த இடமாக நம்பப்படும் இடத்தில், மொகலாய வம்சத்தின் நிறுவனரான பாபர் மசூதியைக் கட்டினார்.
1853: இடத்துக்கு சொந்தம் கொண்டாடி முதன்முதலில் இந்து- முஸ்லிம் பிரிவினர் இடையே மோதல் வெடித்தது.
1855-1859: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று சட்டப்பூர்வமாக பிரச்சினை எழுந்த நிலையில், இந்து முஸ்லிம் என இரு தரப்பும் செல்லலாம் என்று சமரசம் செய்யப்பட்டது.
1885: மசூதிக்கு வெளியே பூஜை செய்ய தனி இடம் உருவாக்கப்பட்ட நிலையில், அங்கு நிழற்குடை அமைக்கவேண்டும் என்று ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மனு நிராகரிக்கப்பட்டது.
1949: ராமர், சீதையின் சிலைகள் மீண்டும் மசூதிக்குள் மர்மமான முறையான நிலையில் வைக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் வெடித்தது.
1950-1959: சம்பந்தப்பட்ட இடத்தில் வழிபட வேண்டும் என்று உரிமை கோரி இந்து அமைப்புகள், நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தன.
1962: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சன்னி வக்ஃபு வாரியம், மசூதி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடியது.
1984: அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் இந்துக்கள் வழிபடலாம் என்று அனுமதி கொடுத்தார். அது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
1985-86: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கியது.
1990: பாஜக தலைவர் எல்.கே.அத்வானி அகில இந்திய அளவில் ரத யாத்திரையைத் தொடங்கினார். ஆனாலும் பிஹாரில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1992: இந்து கர சேவகர்கள் அடங்கிய கும்பலால், பாபர் மசூதி இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. இது இந்தியா முழுவதும் மத வன்முறைகளைத் தூண்டியது.
1994: சர்ச்சைக்குரிய பகுதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி லிபரான் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
2002: குஜராத்தில் நடந்த மதக்கலவரம் ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உயிரை பலி வாங்கியது.
2002: சர்ச்சைக்குரிய இடம் குறித்த பல்வேறு வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்தது.
2003: இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி அமைப்பு, மசூதிக்கு அடியில் இந்துக் கட்டமைப்புகள் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது.
2010: அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா (குழந்தை ராமர்) ஆகிய அமைப்புகளுக்கு மூன்றாகப் பிரித்து அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
2011-2019: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அனைத்து அமைப்புகளுமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
2019: சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேபோல முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள தனியாக நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2020: ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.
2024: ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.