உலகின் மிகவும் வயதான பாடிபில்டராக வலம் வரும் முதியவர் ஒருவர் 90 வயதிலும் உடற்பயிற்சி எடுத்து வருகிறார்.
90 வயதில் பாடிபில்டிங்:
அமெரிக்காவை சேர்ந்த ஜிம் ஆரிங்டன் என்ற முதியவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். அதற்கு காரணம், தள்ளாத வயதிலும் அந்த முதியவர் உடற்பயிற்சி செய்து பாடி பில்டராக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுதான்.
ஜிம் ஆரிங்டன் 2015ம் ஆண்டு தனக்கு 83 வயது இருக்கும் போது பாடி பில்டிங்கில் உலக சாதனை படைத்தார். உலகின் மிகவும் வயதான பாடிபில்டர் என கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்றார். அதன் பிறகும் பாடிபில்டிங்கில் ஓய்வு பெறாத ஜிம் ஆரிங்டன் தொடர்ந்து, தொடர்ந்து உடற்பயிற்சி எடுத்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அண்மையில், ரெனோவில் நடந்த IFBB புரொபஷனல் லீக் போட்டியில் பங்கேற்ற ஜிம் ஆரிங்டன், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பாடி பில்டர் பிரிவில் 3வது இடத்தையும், 80 வயதுக்கு மேற்பட்ட பாடி பில்டர் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தினார்.
சுவாரஸ்ய பின்னணி:
வயதானாலும் பாடி பில்டிங் மீது ஆர்வம் செலுத்துவதற்கான காரணத்தை ஜிம் ஆரிங்டனே கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அவர், தனது குழந்தை பருவமே பாடி பில்டிங் மீது தான் ஆர்வம் செலுத்த காரனமாக இருந்ததாக கூறியுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்ததால் ஜிம் ஆரிங்டன் மிகவும் ஆரோக்கியமற்றவராக இருந்துள்ளார். குழந்தையாக இருக்கும் போது அடிக்கடி நோய் வாய்ப்பட்ட ஜிம் ஆரிங்டன், ஆஸ்துமா நோயாளும் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜிம்மின் உயிரை கப்பாற்ற அவரது பெற்றோர் போராடியுள்ளனர்.
இதனால் 15வது வயதில் தனது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்பிய ஜிம் ஆரிங்டன், உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். பளு தூக்குவதில் அதிக ஆர்வம் செலுத்திய ஜிம் ஆரிங்டன், ஒரு பாடி பில்டராக வலம் வர தொடங்கினார். 90 வயது ஆனாலும் உடற்பயிற்சி செய்து வரும் ஜிம் ஆரிங்டன் பிறருக்கு உதாரணமாக இருந்து வருகிறார். தனது உணவில் பால், மாட்டிறைச்சி, ஆலிவ் எண்ணெய், காளான்களை அதிகளவில் எடுத்து கொள்வதாக ஜிம் ஆரிங்டன் கூறியுள்ளார்.
தான் உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன் என ஜிம் ஆரிங்டன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!