தனியாக இருக்கும் இளைஞர்கள் காதலியை வாடகைக்கு எடுக்கும் விநோத திட்டத்தை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
காதலி அல்லது காதலன் இல்லை என மனம் வருந்துவோரும், தனியாக இருப்பதாக நினைத்து கவலை படுவோரும், திருமணம் ஆகாத இளைஞர்களுக்கும் ஜில்லுன்னு ஒரு அறிவிப்பு ஜப்பானில் வெளியாகியுள்ளது. கடந்த5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானியில் திருமணம் ஆகாமல் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாடகைக்கு காதலர்களை அறிமுகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதலும் அளித்துள்ளது. அதாவது, தனக்கு ஒரு துணை இல்லாமல் மனதளவில் சோர்வடைந்து இருக்கும் இளைஞர்கள், வேலையில் எப்பொழுதும் பிசியாக இருப்போர், துணை இல்லாமல் தனிமையில் வாழும் ஆண் அல்லது பெண் வாடகைக்கு காதலர்களை எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு காதலன் அல்லது காதலியை வாடகைக்கு எடுக்க ரூ.3000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 2 மணி நேரம் வரை அவர்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கான இணையை தேர்வு செய்யும் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கட்டணமாக ரூ.1200 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு ஆறுதலாக வரும் இணைக்கு அன்பளிப்போ அல்லது பரிசோ கொடுக்கக்கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் அனுமதியுடன் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இளைஞர்கள் மது அருந்த வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியது சர்ச்சையானது. மது குடிப்பதற்கு ஒரு சில அரசுகள் தடை விதித்துள்ள நிலையில், நாட்டின் வருவாய் இழப்பை சரிசெய்ய இளைஞர்கள் மது அருந்துவதை ஜப்பான் அரசு ஆதரித்தது. கொரோனாவுக்கு பிறகு மது அருந்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டாததால், அதன் மூலம் வரும் வருவாய் 13 சதவீதம் வரை குறைந்தது. அதை சரிசெய்ய மது விற்பனையாளர்களை ஊக்குவித்த ஜப்பான் அரசு, அதிகளவில் யார் மது விற்பது என்ற போட்டியையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் படிக்க: Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!