பிரான்ஸ் நகரில் உள்ள நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஈபிள் டவரில் (Eiffel Tower) ஒளிரும் விளக்குகள் ஒரு மணிநேரம் முன்னதாகவே ஆஃப் செய்யப்படும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தட்டுப்பாட்டை தடுக்கும் பொருட்டு, அதனை சேமிக்கும் நோக்கத்தில் ஈபிள் டவரில் இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் முன்னதாகவே நிறுத்தப்படும் என்று மாகாண மேயர் தெரிவித்துள்ளார். ஈபிள் டவரில் இரவு ஒரு மணி வரை மின்விளக்குகள் ஒளிர்வது வழக்கமாகும். ஆனால், தற்போது பிரான்ஸ் நகரில் நிலவும் மின்சாரம் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கை நீயூஸ் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் ஈபிள் டவர் மின்விளக்குகள் ஒளிராமல் இருப்பது பகிரப்பட்டுள்ளது. பிரான்ஸில் நிலவும் மின் தட்டுப்பாட்டை கையாள்வதற்கு அனைவரும் 10 சதவீதம் மின்சார பயன்பாட்டை குறைத்து கொள்ளுமாறு அதிபர் இமானுவெல் மெக்ரான் (Emmanuel Macron) கேட்டுக்கொண்டார்.
ஜெர்மனி நாட்டிடம் இருந்து பிரான்ஸ் மின் சக்தி உதவி கோரியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவருக்கு வயது 135. இன்னும் பிரம்மிப்பூட்டும் வகையில் வானுயர்ந்து நிற்கும் ஈபிஸ் டவரில் துருப்பிடித்தப்படி இருக்கிறது. இதை சரிசெய்ய நடைவடிக்களுக்கு பதிலாக அதற்கு 60 மில்லியன் மதிப்பில் காஸ்மெடிக் பெயிண்ட் பூச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக பாரிஸ் நகர் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இரும்புகளை வைத்து மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஈபிஸ் டவர் 324 மீட்டர் உயரமுள்ள டவர். இது Gustave Eiffel என்பவரால் கட்டப்பட்டது. உலக அளவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் இது. ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் வாசிக்க..
Mohammad Shami: தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் முகமது ஷமி விலகலா?..