இந்தியாவில் கடந்த சில காலங்களாக மகளிர் கிரிக்கெட் அணி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மிதாலிராஜ், ஸ்மிரிதி மந்தனா, கர்மன்பிரீத்கவுர் என்று பல வீராங்கனைகளும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களைப் போல ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயம். இந்த நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக நீண்டகாலம் இந்திய அணிக்காக ஆடிய வீராங்கனை 39 வயதான ஜூலன்கோஸ்வாமி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு பிறகு தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு பல வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஜூலன் கோஸ்வாமி விளையாடியுள்ளார். இவருக்கு முன்னதாக முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 22 ஆண்டுகள் விளையாடி முதலிடத்தில் உள்ளார். இந்தநிலையில், ஜூலன் கோஸ்வாமி செய்த சாதனைகளின் பட்டியலை கீழே காணலாம். 


255 ஒருநாள் விக்கெட்கள்:


ஜூலன் கோஸ்வாமி 255 விக்கெட்களை பற்றி ஒருநாள் போட்டிகளில் அதிக வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் 191 விக்கெட்டுகளுடன்  இரண்டாவது இடத்தில் உள்ளார்.


43 ஒருநாள் உலகக் கோப்பை விக்கெட்கள்:


வலது கை வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி 50 ஓவர் பெண்கள் உலகக் கோப்பையில் 43 விக்கெட்கள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


இளம் வயதில் பத்து விக்கெட்கள்:


23 வயது 277 நாட்கள் டெஸ்ட் போட்டியில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை ஜூலன் கோஸ்வாமி பெற்றுள்ளார். அவர் 2006 ஆம் ஆண்டு டவுண்டனில் இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் பெட்டி வில்சன் 26 வயது 120 நாட்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


சர்வதேசப் போட்டிகளில் இரண்டாவது மிக நீண்ட நாட்கள் விளையாடிய பெருமையை (20 வருடம் 258 நாட்கள்) ஜூலன் கோஸ்வாமி பெற்றுள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 22 ஆண்டுகள் 274 நாட்கள் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.


10095 பந்துகள்: 


மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை ( 10095 ) வீசியவர் என்ற சாதனையையும் படைத்தார் . 6847 பந்துகளை வீசிய இங்கிலாந்து வீராங்கனை கேத்ரின் பிரண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


மேலும் சில சாதனைகள்..



  •  சர்வதேச கிரிக்கெட்டில் 355 விக்கெட்டுகளை கோஸ்வாமி எடுத்துள்ளார்.

  • ஜூலன் டெஸ்ட் போட்டிகளில் 20 வருடம் 261 நாட்கள் பெருமையை பெற்றுள்ளார்.

  • ஜூலன் தனது ஒருநாள் போட்டிகளில் 69 கேட்சுகளை எடுத்து சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 79 கேட்சுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

  • சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த ஒரே இந்தியர், 50 விக்கெட்டுகள் மற்றும் 50 கேட்சுகள் எடுத்த ஒரே இந்தியர் ஜூலன். ஒட்டுமொத்தமாக, இந்த சாதனையை எட்டிய ஆறு வீரர்களில் இவரும் ஒருவர்.

  • 2007 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றார்.

  • 2011 இல் நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் ஜூலன் கோஸ்வாமி 6/31 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இருப்பினும் அந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. 


இந்திய மகளிர் தேசிய அணிக்காக மட்டுமின்றி ஆசிய மகளிர் அணி, பெங்கால் மகளிர் அணி, கிழக்கு மண்டல மகளிர் அணி, இந்திய பச்சை அணி, மகளிர் டி20 அணியான ட்ரெயில்ப்ளேசர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். சிறந்த வேகப்பந்துவீச்சாளரான கோஸ்வாமி பல நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்காக கடைசிகட்டத்தில் அதிரடியான பேட்டிங்கையும் வெற்றி பெற்றுள்ளார்.