Jupiter Closest to Earth: வியாழன் கோளானது, பூமிக்கு நெருக்கமாக நாளை வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


நாம் வசிக்கும் சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் உள்ளன. சூரியனிலிருந்து 5வது வரிசையில் உள்ள வியாழன், கோள்களிலேயே மிகப் பெரிய கோளாக உள்ளது. இக்கோள் மேற்பர்ப்பில் வாயுக்கள் நிரம்பியுள்ளதால் வாயு கோள் என்றும் அழைக்கப்படுகிறது. 8 கோள்களும் சூரியனை சுற்றி வரும்போது, சில காலங்களில் பூமிக்கு நெருக்கமாக சில கோள்கள் வருவதுண்டு. அதனடிப்படையில் வியாழன் கோளானது நாளை (திங்கள் கிழமை ) பூமிக்கு அருகில் வரவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






59 ஆண்டுகளுக்கு பிறகு:


இந்த அரிய நிகழ்வானது, இதற்கு முன்பு 1963 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்நிலையில் 59 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழவுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை சுற்றி வரும்போது பூமி மற்றும் வியாழன் கோள்களுக்கிடையேயான அதிகபட்ச தூரமானது தோரயமாக 600 மில்லியன் மைல்கள் இருக்கும் என்றும் குறைந்தபட்ச தூரமாக 367 மில்லியன் மைல்கள் இருக்கும்.


அரிய நிகழ்வு:


இந்நிலையில் நாளை குறைந்தபட்ச தூரமான 367 மில்லியன் மைல்கள் தூரத்தில் பூமி மற்றும் வியாழனுக்கிடையே இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வை சாதாரண பைனாக்குலர் மூலமாக பார்க்கலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த அரிய நிகழ்வை காண பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.


பூமிக்கு ஒரு நிலா இருப்பது போல, வியாழன் கோளுக்கு பெயர் வைக்கப்பட்ட 53 நிலாக்கள் இருப்பதாகவும், ஆனால் மொத்தமாக 79 நிலாக்கள் இருப்பதாக நம்புவதாகவும் நாசா தெரிவித்துள்ளது


எப்படி பார்ப்பது:






இந்நிகழ்வின் போது சூரியன், பூமிக்கு மேற்கு திசையில் இருக்கும், அப்போது வியாழன் கோள் கிழக்கு திசைக்கு வரும் என்பதால், நாளை இரவு வியாழன் கோள் பிரகாசமாக தெரியும். வானத்தில் நாளை இரவு நேரத்தில் மிகந்த வெளிச்சத்துடன் வியாழன் தெரியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


                                     படங்கள்: நாசா(NASA)


வியாழன் கோளை தொலைநோக்கியின் உதவியுடன் சற்று மேடான பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.