Layoffs : அமெரிக்க நிறுவனம் ஒன்று பார்ட்டி வைத்து 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்கம்
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
குறிப்பாக ஊழியர்களுக்கு திடீரென ஒரு மெயில் அனுப்பி பல நிறுவனத்தில் வேளையில் இருந்து தூக்கியது. மேலும் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டும் யாரும் செய்திடாத வகையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்டி வைத்த அமெரிக்க நிறுவனம்
அமெரிக்கா தலைமையிடத்தில் பிரபலமான சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bishop Fox இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சிலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது. அதன்படி, 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
பணிநீக்க அறிவிப்புக்கு முன் இந்நிறுவனமானது, ஊழியர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஊழியர்களுக்கு மிகவும் காஸ்ட்லியான பிராண்டெட் மதுபானம் அளிக்கப்பட்டது என்பது தான். அதன்பின் பார்ட்டி முடிந்து ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Bishop Fox நிறுவனத்தில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
வேறு நிறுவனங்கள்
இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
மேலும், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.. ஜெ.பி நட்டா பேச்சு