பாகிஸ்தான் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 199 இந்திய மீனவர்களை வரும் வெள்ளிக்கிழமை நல்லெண்ண அடிப்படையில்  விடுதலை செய்யப்பட உள்ளனர்.


மீனவர்களை விடுதலை செய்ய முடிவு


பாகிஸ்தானில் உள்ள லந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை வரும் வெள்ளிக்கிழமை விடுவித்து நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு அரசு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக சிந்துவில் உள்ள சிறை மற்று சீர்திருத்த துறையில் காவல் அதிகாரி காசி நசீர் கூறினார். இந்த மீனவர்கள் லாகூர் அனுப்பப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  எதி நல அறிக்கட்டளையின் அதிகாரி ஒருவர் இந்திய மீனவர்களை லாகூருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கும், சிறையில் மற்ற உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்வதாக கூறினார். 


பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு


இவர்களுடன் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட இருந்த இந்தியாவை சேர்ந்த கைதியான சுல்பிகர் சனிக்கிழமையன்று உடல்நலக்குறைவால் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் மார்பு பிரச்சனை இருந்த நிலையில் அவரின் உடல் நிலை மோசமடைந்து நுறையீரல் தொற்று காரணமாக உயிரிழந்ததாகவும் அவரின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும் தெரிவித்தார். 


அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான இந்திய-பாகிஸ்தான் மன்றத்தின் கூற்றுபடி, 631 இந்திய மீனவ கைதிகள் மற்றும் ஒரு இந்திய கைதி ஆகியோர் சிறை தண்டனை முடிந்த நிலையிலும் கராச்சியில் உள்ள லாந்தி மற்றும் மாலிர் சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மன்றத்தில் பணிபுரியும் அடில் ஷேக் இது குறித்து கூறுகையில், இந்த மீனவர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தத்தை மீறியதாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் படிப்பறிவில்லாத ஏழைகள் என்றும் தெரிவித்தார். மேலும் 83 பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய சிறைகளில் உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க 


TN 12th Result 2023 LIVE: 600 க்கு 600.. அனைத்து பாடங்களிலும் 100 எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை..!


TN 12th Result 2023 LIVE: 600 க்கு 600.. அனைத்து பாடங்களிலும் 100 எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை.