பிரபல பிரெஞ்சு ஃபேஷன் நிறுவனமான சேனல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டது சேனல் குழுமம்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாபூரைப் பூர்வீகமாகக் கொண்ட லீனா நாயர், இளங்கலை பொறியியலை முடித்துவிட்டு சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் (XLRI) தன்னுடைய பட்ட மேற்படிப்பை முடித்தார். இங்கு அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக லீனாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்றவுடன் ஹிந்துஸ்தான் யூனிலிவரில் பணிக்கு சேர்ந்த லீனா 2016ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில் அவர் சேனல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், விஜயலட்சுமி நாடார் என்பவர் லீனா நாயரின் சிறு வயது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ”உங்கள் பள்ளி ஆசிரியர் திருமதி ஜீவ் சாஹல், ஹோலி கிராஸ் கான்வென்ட்டில் இருந்து உங்களின் இந்த அபிமான வகுப்புப் படத்தை, 'வகுப்பிலேயே உயரமான பெண்' என்ற கருத்துடன் பகிர்ந்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு லீனா நாயர், சேனல் தலைமை நிர்வாக அதிகாரியாக எனது நியமனமானது, அன்பினாலும் ஆதரவினாலும் நிரம்பி வழிகிறது. நன்றி! நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலளிக்காவிட்டாலும், ஒவ்வொரு கருத்தையும் படித்து வருகிறேன் என்று நம்புங்கள்” என தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படத்தை பலர் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்