டொமினிகனில் விமானம் அவரசமாக தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஃபாலோ லா மூவி, அவரது மனைவி, குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.


தனது இசையின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஃபாலோ லா மூவி. இவரது இயற்பெயர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ஜோஷி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா (31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் இருந்தனர்.


பெண்ணின் திருமண வயதை அதிகாரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!




தென்னாப்பிரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி... விமானத்தில் வீரர்கள்!


 

இந்நிலையில், சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் இருந்து ஜோஷி தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் என மொத்தம் 9 பேர்  தனி சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டனர்.


அப்போது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானத்தை மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசரமாக விமானி தரையிறக்கியுள்ளார். 




‛முட்டாள்... நீங்க ரியல் ஹீரோ இல்லை திருந்துங்கள்...’ அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்!


இதில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எறிந்தது. இதில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


ஏழு பயணிகளில், ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒருவர் டொமினிகன் என்று விமானத்தின் ஆபரேட்டர் ஹெலிடோசா விமானப்படைக் குழு ட்வீட் செய்துள்ளது.