சவுதி அரேபியாவிற்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது விமான சேவையை பாகிஸ்தான் விரிவுப்படுத்தியது. இந்தச் சூழலில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து இஸ்லமாபாத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் (PK-9754) புறப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக ரியாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதற்கிடையே மோசமான வானிலையால் சவுதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தில் விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார். அதனையடுத்து தம்மம் விமான நிலையத்தில் பயணிகள் சில மணி நேரம் காத்திருந்தனர். வானிலை சீரான பிறகு விமானம் புறப்பட தயாரானது.
இந்நிலையில், விமானம் புறப்பட தயாரானபோது பயணிகளின் பொறுமையை மேலும் சோதிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. விமானத்தை ஓட்டிய விமானி தனது பணி நேரம் முடிந்து விட்டது எனக்கூறி விமானத்தை மேற்கொண்டு இயக்க மறுத்துள்ளார்.
மேலும் வாசிக்க: Sunday lockdown | இன்று முழு ஊரடங்கு... இந்த விவரத்தையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க..!
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து, விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் பயணிகள் அருகில் இருந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு பின்னர், இஸ்லமாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விவகாரத்தால் தம்மம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த விமானிக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.
முன்னதாக இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், “விமானப் பாதுகாப்புக்கு அவசியம் என்பதால் ஒரு விமானி கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும். அனைத்து பயணிகளும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு சென்றடைவார்கள். அதுவரை ஹோட்டல்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கொரோனா அட்டாக்; குழந்தை பிறந்ததும் கோமா... மரணத்தை வென்று குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாய்!