கொரோனா பிடியிலிருந்து சில காலம் விடுதலையாகியிருந்த உலகம் தற்போது மீண்டும் சிறைபட ஆரம்பித்துள்ளது. வைரஸின் வேகம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.


அந்தவகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 


அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.  இன்றைய தினத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 




ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் செயல்படும். காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதேபோல், மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில் சேவையும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் இயங்கும். வெளியூரில் இருந்து தொலைதூர பேருந்துகள், ரயில்களில் வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோ, வாடகை கார்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை வழக்கம்போல் ஏற்றிச் செல்வதற்கு ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இன்று முகூர்த்தநாள் என்பதால் சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின்போது அதனை காவல் துறையினரிடம் காண்பித்து செல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இன்றை முழு ஊரடங்கில் தமிழ்நாட்டில் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சோதனை செய்யப்படுகின்றன. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை மொத்தம் 350 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. 10 ஆயிரம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் வாசிக்க:Netaji Subash chandra bose | ‛இந்தியாவின் கர்வம்...இந்தியரின் பெருமிதம்’ - நாட்டு மக்கள் நெஞ்சத்தில் நீங்காத நேதாஜி பிறந்த தினம்!


Todays News Headlines: வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்...தேர்தல் பேரணி தடை.. முக்கியச் செய்திகள்!