உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸைக் கண்டு உறைந்து போயுள்ளது. B.1.1.529 எனும் இந்த புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது.
ஆனால், தென்னாப்ரிக்காவில் இந்த வகை கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், ஓமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.
ஏஞ்சலிக் கோட்சீ என்று அந்த மருத்துவர் தென் ஆப்ரிக்க மருத்துவக் கழகத்தின் தலைவராக உள்ளார். அவர் தான் கடந்த 10 நாட்களில் சிகிச்சை அளித்த 30 பேரிடம் கண்ட அறிகுறிகள் பற்றி கூறியுள்ளார்.
ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத அயர்ச்சி, லேசான தசை வலி, தொண்ட கரகரப்பு ஆகியன ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த அறிகுறிகளால் மோசமான பாதிப்பு ஏற்படுமா என்பதை நாங்கள் இப்போதே கூற முடியாது. ஆனால், இதுவரை நாங்கள் ஓமைக்ரான் பாதித்தவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவான ஆண்களாக, அதுவும் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிவித்தார்.
இந்த வைரஸ் ஏற்கெனவே ஐரோப்பாவில் பரவியிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நாங்கள் ஜீனோம் ஸ்க்வென்சிங் எனப்படும் மரபணு வரிசைப்படுத்துதலை ஒழுங்காகச் செய்கிறோம். உலக சுகாதார நிறுவனம் கூறியது போல் நாங்கள் மரபணு வரிசைப்படுத்துதலை முறையாக செய்து அது குறித்த தகவல்களை அப்டேட் செய்து வருகிறோம். ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு செய்யத் தவறி இருக்கலாம். அதனால் நாங்கள் முதலில் பதிவு செய்ததால் இதை வைத்தே எங்கள் நாட்டுக்குத் தடை விதித்து சிறுமைப்படுத்துகின்றனர். நாங்கள் உலகுக்கு இந்த வைரஸை அடையாளம் காட்டியுள்ளதற்காக பாராட்ட வேண்டும். ஐரோப்பாவில் உள்ளவர்களிடம் சோதனை நடத்தினால் அங்கு ஏற்கெனவே இந்த வைரஸ் பதிவானதை அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர் ஏஞ்சலிக் கோட்சீ கூறியுள்ளார்.
ஓமைக்ரான் பற்றி உலகம் அஞ்சிக் கொண்டிருக்கும் சூழலில், உலக சுகாதார மையமோ இதுவரை ஓமைக்ரானின் பாதிப்பு இப்படித்தான் இருக்கும் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் அதிக பரவும் தன்மை கொண்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் தடுப்பூசித் திறனை மீறியும் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தடுப்பூசி செலுத்தாவிட்டால் செலுத்திக் கொள்ளுதல் போன்ற பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்