அட.! குரங்கு நம்ம பையன்தானா? எவ்ளோ ஒற்றுமை பாருங்க.! கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

இந்த நியூரான்கள் குரங்கு,மனிதன் மற்றும் கினியா பன்றி வகைகளில் ஒரே போலச் செயல்படுவதாக பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Continues below advertisement

ஒருவர் பேசுவதை கவனித்து உள்வாங்குவதில் குரங்கும் மனிதரும் ஒரே மாதிரி செயல்படுவதாக பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். ஒருவர் பேசுவதை உள்வாங்கும்போது மூளை நரம்பின் கேட்கத் தூண்டும் நியூரான்கள் சில சமிக்ஞையை அனுப்பும். இந்த நியூரான்கள் குரங்கு,மனிதன் மற்றும் கினியா பன்றி வகைகளில் ஒரே போலச் செயல்படுவதாக பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.மனிதர்களில் கேட்கும் திறன் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. 

Continues below advertisement

பிறந்த குழந்தைகளில் கேட்கும் திறன் குறைபாடு இருக்கிறதா என்பதை எஃப்.எஃப்.ஆர் என்னும் முறை கொண்டு கண்டறிவார்கள். இந்த முறைப்படி தலைமுடி வேர் பகுதிகள் சிறிய அளவிலான மின்சாரம் அனுப்பி என்ன மாதிரியான சமிக்ஞைகள் கிடைக்கிறது எனப் பரிசோதிக்கப்படும். இதுநாள் வரை மூளை நரம்பு வரைதான் இந்த சிக்னல்கள் செல்கிறது என விஞ்ஞானிகள் நம்பியிருந்த நிலையில் தற்போது இவை காது நரம்புகள் வரை செல்வதாகக் கண்டறிந்து உள்ளார்கள். இதுபோன்று சமிக்ஞைகள் செல்வது மனிதர்கள், கினியா பன்றிகள் மற்றும் மக்காவ் வகைக் குரங்குகளில் ஒன்று போலச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola