Nigeria : நைஜீரியாவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் நைஜீரியா. ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை கொண்டு நாடு நைஜீரியா. ஏறத்தாழ 151 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்த நாட்டில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிது. இங்கு பெரும்பாலான விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு கடலை, பனைமரத்து எண்ணெய் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் பெரும் பங்காக உள்ளது. இப்படி விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக கால்நடை மேய்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அப்பாவி மக்கள் உயிரிழப்பு
குறிப்பாக நைஜீரியாவின் பெனு மாகாணத்தில் உமோகிடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக கால்நடை மேய்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில், உமோகிடி கிராமத்துக்குள் மர்ம கும்பல் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து நுழைந்தனர்.
இதனை அறிந்த மக்கள் அச்சத்தில் அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். அப்போதும் கூட அந்த மர்ம நபர்கள் குருவியை சுடுவது போல் கண்ணில் தென்பட்டவர்களையெல்லம் சுட்டுத் தள்ளினர். கண்மூடித்தனமாக மக்களை மர்ம நபர்கள் சுட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு தப்பியோடினர்.
இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 50 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க
கொலை மிரட்டல் எதிரொலி… இந்தியாவில் வெளியிடப்படாத புல்லட்-ப்ரூஃப் கார் வாங்கிய சல்மான் கான்!