'தி போப் ஆன்சர்ஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை டிஸ்னி+ தயாரித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்களை சந்தித்து போப் பிரான்சிஸ் உரையாடியிருந்தார். கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், இஸ்லாமியர் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் போப்பிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடினர்.


இளைஞர்களுடன் உரையாடிய போப்:


இந்த சந்திப்பை ஆவணப்படுத்தி எடுத்திருப்பதே 'தி போப் ஆன்சர்ஸ்' படம்.  LGBT உரிமைகள், கருக்கலைப்பு, 18+ திரைப்படம், பாலியல் உறவு, மத நம்பிக்கை, கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு போப் பதில் அளித்தார். 


குறிப்பாக, டேட்டிங் குறித்து பேசிய அவர், "டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி காதல் துணையை தேர்வு செய்வது இயல்பான ஒன்று. இளைஞர்களுக்கு ஒருவரையொருவர் சந்திக்கும் ஆர்வம் இருக்கிறது. அது மிகவும் நல்லது" என்றார்.


நீங்கள் காதல் உறவில் இருந்திருக்கிறீர்களா என இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போப், "நான் சன்னியாசத்தை தேர்வு செய்வதற்கு முன்பு ஒரு காதல் உறவில் இருந்தேன். ஆனால், பின்னர் நான் பிரம்மச்சரியத்தை தேர்ந்தெடுத்தேன்" என்றார்.


பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்த போப்:


பாலியல் உறவின் நற்பண்புகளை பாராட்டி பேசிய போப், "மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்று பாலியல் உறவு" என்றார். சுயஇன்பம் குறித்து பேசிய அவர், "உங்களை பாலியல் ரீதியாக வெளிப்படுத்துவது ஒரு செல்வம். எனவே உண்மையான பாலியல் வெளிப்பாட்டிலிருந்து விலகும் எதுவும் உங்களைக் குறைத்து, இந்த செழுமையைக் குறைக்கிறது.


LGBT மக்கள் கத்தோலிக்க திருச்சபையால் வரவேற்கப்பட வேண்டும். எல்லா நபர்களும் கடவுளின் குழந்தைகள், எல்லா நபர்களும். கடவுள் யாரையும் நிராகரிப்பதில்லை. கடவுள் ஒரு தந்தை. மேலும் சபையிலிருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை" என்றார்.


கருக்கலைப்பு குறித்து பேசிய போப், "கர்ப்பத்தை கலைக்கும் பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருட்களை பெயர் சொல்லி அழைப்பது நல்லது. கருக்கலைப்பு செய்த நபருடன் செல்வது வேறு விஷயம். செயலை நியாயப்படுத்துவது வேறு" என்றார்.


இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு போப் அளித்த பதில்களும் வாடிகனின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான L'Osservatore Romano-வில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான நேர்மையான உரையாடல்கள் என்ற பெயரில் போப்பின் பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க:


PM Modi Chennai Visit LIVE: சென்னை வந்தார் பிரதமர் மோடி..! ஆளுநர், முதலமைச்சர் உற்சாக வரவேற்பு..!