அன்றாடம் அதிகாலை 5 மணிக்கே இமெயில்களை வாசிக்க ஆரம்பித்துவிடுவேன் என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மெயில்களை மத நூல்களை வாசிப்பதுபோல் கவனமாக வாசிப்பேன் என்று கூறியுள்ளார. நீங்கள் தொழில்நுட்ப பிசினஸில் இருந்தால் அது என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஆப்பிள் சிஇஓ டிம் குக்.


உலகம் முழுவதுமே ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ஏகப்பட்ட மவுசு உண்டு. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பாதுகாப்பாகவும் , நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் பயனாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நம்பிக்கை. மேலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதனை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ஒரு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் பல சுவாரஸ் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களைப் படிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அன்றாடம் அதிகாலை 5 மனிக்கே இமெயில்களை வாசிக்க ஆரம்பித்துவிடுவேன் என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மெயில்களை மத நூல்களை வாசிப்பதுபோல் கவனமாக வாசிப்பேன். நான் தொழில்நுட்ப தொழிலில் ஜாம்பவானாக இருக்கலாம். அந்த தொழில்நுட்பம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை இதுபோன்ற பின்னூட்டங்கள் வாயிலாகத் தான் தெரிந்து கொள்ள முடியும். 


வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்கள் தான் என்னை ஒவ்வொரு நாள் காலையிலும் ஊக்குவிக்கிறது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் தருகிறது.


ஒரு வாடிக்கையாளர் தான் ஐஃபோன் 14 (iPhone 14) வாங்கியதாகவும். அதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் எழுதியிருந்தார். ஐஃபோன் 14ல் கிராஷ் டிடெக்‌ஷன் என்ற ஒரு வசதி உள்ளது. அந்த வசதி மூலம் தன் கார் ஓட்டுநர் திடீரென வலிப்பால் பாதிக்கப்பட்டபோது உதவி பெற முடிந்தது என்றும். மொபைல் நெட்வொர்க் இல்லாத இடத்திலும் கூட அவசர காலத்தில் ஐபோன் 14ஐ பயன்படுத்த முடிகிறது. அதற்கு அதில் உள்ள Emergency Satellite Connectivity அம்சமே காரணமென்றும் கூறியுள்ளார். (இந்த வசதி இந்தியாவில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை).


அவரது இந்த பின்னூட்டம் என்னைக் கவர்ந்தது. நான் தொழில்நுட்பத் துறை தொழிலில் இருக்கிறேன். அந்த தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதை அறிவது மகிழ்ச்சி. உங்கள் தயாரிப்பு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது அலாதி சுகம்.


அதேவேளையில் எனக்கு நெகடிவி கமென்ட்ஸ் வராமல் இருப்பதில்லை. ஆனால் அது என்னை சோர்வடையச் செய்யாது. அதை ஆராய்ந்து நாங்கள் எங்கே மேம்படுத்த வேண்டும் என்று பரிசீலிப்போம். வாடிக்கையாளர்கள் கருத்துகள் தான் எங்களின் ஆதாரம்.


இந்த உலகில் உள்ள மிக்கப்பெரிய நிறுவனங்களின் சிஇஓக்களில் வெகு சிலர் தங்களின் தனிப்பட்ட இமெயில் ஐடியை வெளிப்படையாக பொது வெளியில் அறிவிக்கின்றனர். அதில் நானும் ஒருவனாக இருப்பதில் எனக்குப் பெருமிதம்.
 
ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூன் 5 முதல் ஜூன் 9 வரை சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. அந்த மாநாட்டில் ஐபோன்களுக்கு iOS 17 செயலி அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை இன்னும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.