• ஆண்டுக்கு 2 முறை பிளஸ் 2 தேர்வு, செமஸ்டர் முறை: மத்திய அரசின் புது திட்டம்


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு கடந்த ஆண்டுகளில்  4 முறை திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 5ஆவது முறையாக தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மாற்றப்பட உள்ளது. மேலும் படிக்க




  • சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. 




3 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு நேற்று சென்ற அவர் சுகோய் ரக போர் விமானத்தில் முதல்முறையாக திரௌபதி முர்மு பயனம் மேற்கொண்டார். இந்த விமானத்தை குரூப் கேப்டன் நவீன் குமார்  இயக்கினார். இந்த போர் விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார். மேலும் படிக்க



  • பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ்


தெலங்கானாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ரூ. 11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியிலும், திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் படிக்க



  • நடுவானில் விமானத்தில் திடீரென அவசர கதவை திறக்க முயன்ற பயணி 


டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம்  6E 308 என்ற இண்டிகோ விமானப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில் 40 வயதுடைய ஒரு பயணி மதுபோதையில் இருந்துள்ளார். அவர் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார். இந்த சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க



  • ஆந்திரப்பிரதேசத்தில் 15 அரிய வகை உலோகங்கள் கண்டுபிடிப்பு


 கடந்த மாதம் நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் 15 வகை கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க