தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல்  உலகெங்கும் இருக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்கள் மற்றும் புராண கதைகள் உண்டு. ராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்றும் இரணியனை வதம் செய்த நாள் என்றும் பல காரணங்கள் இருக்கின்றது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளி நாட்டில் வாழும் இந்தியர்களும் சற்றும் உற்சாகம் குறையாமல் கொண்டாடுவார்கள். தீபாவளியன்று அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இனைந்து வாழ்த்துக்களை பரிமாறி, வெடி வெடித்து கொண்டாடுவர். ஆனால் வெளிநாட்டில் விடுமுறை இல்லாததால் பலரும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வந்தனர். இந்த நிலையில் 'தீபாவளி பண்டிகை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், ​​தீபாவளியைப் பற்றி அறிந்துகொள்ள குழந்தைகளை ஊக்குவிக்ககும் வகையிலும் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும்” என நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்தார். 


2023 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் கூறினார், இது தீபாவளி பண்டிகையின் வரலாறு தெரிந்து கொள்ள மட்டுமல்லாமல், தங்களுக்குள் இருக்கும் தனி திறமையை கண்டறியவும் ஊக்குவிக்கும் என தெரிவித்தார். 


நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் மற்றும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோருடன் மேயர் எரிக் ஆடம்ஸ் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது தனது உரையில், தீபாவளி மற்றும் தீப ஒளி திருவிழா என்றால் என்ன என்பதைப் பற்றி  கற்றுக்கொண்டேன்" என்று கூறிப்பிட்டார்.


மேலும் அவர் பேசுகையில் நியூயார்க் நகர பள்ளிகளில் தீபாவளியை விடுமுறையாக அறிவித்ததன் மூலம், “நியூயார்க்கில் தீபாவளி பண்டிகையை ஏராளமான மக்கள் கொண்டாடி வருகின்றனர் இது விடுமுறையாக மட்டும் கருதாமல், ​​தீபாவளியைப் பற்றிக் கற்றுக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இது இருக்கும், எனவும் கூறினார். தீபத் திருவிழாவைக் கொண்டாடுவது என்றால் என்ன, அதன் வரலாறு, எதனால் கொண்டாப்படுகிறது என்பது பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் முடியும் ”என்று அவர் கூறிப்பிட்டார். நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத் அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்ததற்கு அந்நாட்டு மேயருக்கு நன்றி தெரிவித்தார்.  “இது இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த அங்கீகாரம் நியூயார்க் நகரத்தின் பன்முகத்தன்மை காட்டுகிறது" என அவர் கூறினார்.


நியூயார்க்கில் அரசு அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய-அமெரிக்க பெண்மணி திருமதி. ஜெனிபர்  ராஜ்குமார், “ நியூயார்க்கில் தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் 2,00,000க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர், மதங்களை கடந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகையை   அங்கீகரிக்கும் வகையில் விடுமுறை அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். பல ஆண்டுகளாக, வசிக்கும் நூறாயிரக்கணக்கான இந்தியர்களைக் கருத்தில் கொண்டு தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவிக்க தொடர்ந்து கோரிக்கை வந்த நிலையில், தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.