குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது ஏக்தா நகர். ஏக்தா நகரில் உள்ள கெவடியாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரசுடன் இணைந்து பிரதமர் மோடி மிஷன் லைப் என்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “ பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரசுக்கு இந்தியா இரண்டாவது வீடு போன்றது. அவர் தனது இளமை பருவத்தில் பல முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை குஜராத்திற்கு வரவேற்பது குடும்பத்தில் உள்ள ஒருவரை வரவேற்பது போன்றது.


இந்தியாவின் பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலையான ஒற்றுமை சிலைக்கு முன்பாக சுற்றுச்சுழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய சிலை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு உத்வேகம் அளிக்கும்.






காலநிலை என்பது வெறும் கொள்ளை தொடர்பான பிரச்சினை என்றும், அரசுகளோ அல்லது சர்வதேச நிறுவனங்களோ அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்து இருக்கிறார்கள். மாறி வரும் வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கும்.




மக்களில் சிலர் ஏ.சி.யின் வெப்பநிலையை 17 அல்லது 18 டிகிரிக்கு குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது எதிர்மறையான விளைவுகளை சுற்றுச்சூழல் பாதிப்பில் ஏற்படுத்தும். ஏசி வெப்பநிலையை 18 டிகிரியில் வைத்து போர்வையை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, ஏ.சி. வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்து மின்சார பயன்பாட்டை குறைப்பது நல்லது.






மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் எதிர்பாராத பேரழிவுகள் காணப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்பது கொள்ளை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது. சுற்றுச்சூழலுக்கு தனி மனிதனாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் பங்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தாங்களாகவே கண்டறிந்துள்ளனர்.


மிஷன் லைப் என்ற மந்திரம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்பதாகும். இது இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் சக்தியை இணைக்கிறது. அதை சிறந்த முறையில் பயன்படுத்த மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மகாத்மா காந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தையும் பல காலங்களுக்கு முன்பே புரிந்து கொண்ட சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர்.”


இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் படிக்க : ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!


மேலும் படிக்க : ஹூக்கா பார்களுக்கு தடை... தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்... மீறினால் என்னாகும்?