அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்யையே கவர்ந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலின் அயன் டோம். ஆனால், அதன் பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவத்தை செய்துள்ளது ஈரான். ஆம், அயன் டோமை மீறி, டெல் அவிவ்-வில் உள்ள இஸ்ரேலின் ராணுவ தலைமையகத்தை தங்கள் ஏவுகணையால் தாக்கியுள்ளது ஈரான்.
அயன் டோமை மீறி தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம்
உலகத்தில் உள்ள சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இஸ்ரேலின் அயன் டோம். இதன் வல்லமையால் கவரப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில், அயன் டோம் போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பை விண்ணில் நிலவுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த அளவிற்கு புகழ்பெற்றிருந்த அயன் டோமின் கண்ணில் மண்ணைத் தூவிய ஈரான் ஏவுகணைகள், இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளிட்ட ராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இது குறித்த வீடியோ பரவிய நிலையில், டெல் அவிவ்-வின் மத்திய பகுதியில் நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஈரான் ஏவுகணையை இடைமறிக்க அயன் டோம் முயன்ற நிலையில், அதிலிருந்து தப்பித்து, இஸ்ரேலிய ராணுவ தலைமையகத்தை ஏவுகணை தாக்கும் காட்சிகள் இம்பெற்றுள்ளன.
நேற்று அதிகாலையில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
முன்னதாக, இஸ்ரேல் தான் நேற்று அதிகாலையில் முதல் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்கள், ஏவுகணைகள் பதுக்கப்பட்டுள்ள இங்கள் என, பல இடங்களை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அதில், இஸ்ரேல் ராணுவ தளபதி உள்ளிட்ட பல ராணுவ தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் என சுமார் 70 பேர் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈரான் கொடுத்த பதிலடி
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் 100 ட்ரோன்களை ஏவி, இஸ்ரேலி பல நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. எனினும் அதை கண்டுகொள்ளாத ஈரான், மேலும் தாக்குதல்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தது.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதலை பாராட்டிய ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இதைவிட கொடூரமான தாக்குதல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
ஆனாலு அசராத ஈரான் இஸ்ரேலின் முக்கிய நகரமாக விளங்கும் டெல் அவிவ்-வின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்யுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே தீவி போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.