மியான்மர் காச்சின் மாநிலத்தில் உள்ள Hpakant சுரங்கத்தில் இன்று காலை 4 மணியளவில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் பணியில் இருந்த 70 பேர் முதல் 100 பேர் வரை காணவில்லை என்றும், ஏற்கனவே பகந்த் என்ற இடத்தில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற நிலச்சரிவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மீட்புப் பணியாளர் ஒருவரின் கூற்றுப்படி, வடக்கு மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து குறைந்தது ஒருவர் இறந்து இருக்கலாம் எனவும்,100 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். 




மேலும், "காயமடைந்த 25 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம், ஒருவர் இறந்துவிட்டதைக் கண்டறிந்துள்ளோம் ."சுமார் 200 மீட்புப் பணியாளர்கள் உடல்களை மீட்கத் தேடிவருவதாகவும், ஒரு சிலர் படகுகளைப் பயன்படுத்தி அருகிலுள்ள ஏரியில் இறந்தவர்களைத் தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க :படிக்காமல் பட்டம்: 117 பேர் முடிவுகள் ரத்து.. சென்னை பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி ஆக்ஷன்!


ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணிக்க கற்கள் எடுக்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் குறைந்த சம்பளத்திற்காக தங்கள் உயிர்களை இழக்கின்றனர் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்தி அண்டை நாடான சீனா மாணிக்க கற்களை வெட்டி எடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. 


இதேபோல், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஜேட் வர்த்தகத்தின் மையமான ஹபகாண்டில் பாரிய நிலச்சரிவில் 170 க்கும் மேற்பட்டவர் உயிரிழந்தனர். 


மேலும் படிக்க :IT Raid: ‛வாத்தி ரெய்டு’ தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு: நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் ப்ரிட்டோ!


பிப்ரவரியில் மியான்மரின் இராணுவம் ஆட்சி மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணங்களால் ஜேட் சுரங்கங்களுக்கு அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


‛ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி...’ -பாட்டிக்கு ‛பாயாசம்’ போட்டு நகையை லபக்கிய பாசக்கார பெண் கைது!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


‛ஆனாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் கூடாது’ தென் கொரியா பட சி.டிக்கள் விற்பனை: 7 பேரை சுட்டுக்கொன்ற வட கொரியா!


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண